நிந்தவூரில் இன்று கையெழுத்து வேட்டை!

சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதேசத்தின் எல்லையை அண்மித்த (வெட்டாறுப்பாலம்) பகுதியில் காரைதீவின் ஆரம்ப எல்லையில் அமையப்பெறவுள்ள மதுபானசாலைக்கு எதிராக இன்று (06) ஜும்ஆத் தொழுகையினைத் தொடர்ந்து நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசலில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிந்தவூர் ஜும்மாப்பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஏ.எம். றசீன் தெரிவித்தார்.

காரைதீவு மக்கள் வங்கிக்கு அருகாமையில் அமையப்பெற்றுள்ள குறித்த மதுபானசாலையானது நிந்தவூரின் வடக்கு எல்லைப்பிரதேசத்தை அண்டிய பகுதியில் இது அமையப்பெறவுள்ளதால் இதன் மூலம் சமூகம் அடையும் பாதிப்புக்களை மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதோடு, இது சம்பந்தமாக மக்களைத் தெளிவூட்டவும் இவ்விடயம் பற்றி நிந்தவூர் பிரதேச செயலாளரிடம் கொண்டுவரவும் நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசல் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த மதுபானசாலை அமைவதற்கு எதிராக அனைவரும் தங்களது கையெழுத்துக்களை இடவேண்டும் என்றும் இந்தவிடயம் சம்பந்தமாக நேற்று (05) காரைதீவு பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -