பி.எம்.எம்.ஏ.காதர்-
நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் மற்றும் நவமணி பத்திரிகையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் நவமணியின் அம்பாறை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட சந்திப்பு இன்று (23-10-2015) காலை சாய்ந்தமருது சீ பிறிச் மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் அவர்களின் சேவையைப் பாராட்டி அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் சார்பாக அதன் தலைவர் தேசமான்ய ஜலீல் ஜீ பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.