பி.எம்.எம்.ஏ.காதர்-
முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ வேண்டும் என்று இஸ்லாம் கட்டாயப்படுத்தியிருக்கிறது இதனாலேயே சனத் தொகைக்கேற்ப அதிகமாக பள்ளிவாசல்களைக் கட்டுகின்றோம் என ஜமாத் அன்ஸாரி சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தலைவர் அஷ்செய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.
பரகஹதெனிய ஜமாத் அன்ஸாரி சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் வழிகாட்டலில் குவைத் நாட்டின் பைத்துல் சக்காத் ஹவுஸ் நிறுவனத்தின் சுமார் 125 இலட்சம் ரூபா நிதியில் மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்லாமிய பிரச்சார மையத்தின் தலைவர் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தலைமையில் நேற்று(22-10-2015)நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜமாத் அன்ஸாரி சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தலைவர் அஷ்செய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி பிரதம அதிதியாக் கலந்து கொண்டு கட்டத்தைத் திறந்து வைத்தார்.
விஷேட அதிதியாக ஜமாத் அன்ஸாரி சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ.எல்.கலீலுர் ரஹ்மான் எம்.ஏ,சிறப்பு அதிதியாக ஜமாத் அன்ஸாரி சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் முகாமைத்துவ உறுப்பினர்களான அஷ்செய்க் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் சலபி, கலாநிதி அஷ்செய்க் அம்ஜத் றாசிக் அகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு அஷ்செய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தவது :- எங்கெல்லாம் முஸ்லிம் கிராமங்கள் இருக்கிறதோ அங்கு வாழ்கின்ற மக்களின் சனத் தொகைக் கேற்ப பள்ளிவாசல்களைக் கட்டியாக வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது அதனால் தேவையான இடங்களிலே பள்ளிவாசல்களைக் கட்டிவருகின்றோம்.
பத்து வயதைத் தாண்டிய ஆணையும். பெண்ணையும் அடித்தாவது தொழவைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டாயப்படுத்தியிருக்கிறது ஆகவே ஒவ்வொரு முஸ்லிம் மரணிக்கும் வரை தொழுதே ஆகவேண்டும் அதற்கு பள்ளிவாசல்கள் அவசியமாகிறது.அது எம்மைப் படைத்த இறைவனின் கட்டளையாகும் என்றார்.