கரீம் ஏ.மிஸ்காத்-
இடம் பெயர்ந்த மாணவர்களின் நலன் கருதி, அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால், புத்தளம் மாவட்டத்தில் 2007 ஆண்டு, ஆறு பாடசாலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ் ஆறு பாடசாலைகளும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் கட்டுப்பாட்டில், மன்னார் கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவருகின்றன.
இப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, வடமாகாண கல்வி ஆலோசனை சபையின் கூட்டத்தில் எடுக்கப்ட்ட தீர்மானத்திற்கமைய, வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, மேற்குறித்த பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின், சுயவிபர ஆவணங்களில் உள்ள குறைபாடுகள், நியமனம் உறுதிப்படுத்தல், பதவி உயர்வு, போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக, நடமாடும் சேவை ஒன்று இன்று (20-10-2015) புத்தளத்தில் அமைந்துள்ள, மன் /புத் / றிஷாட் பதியுதீன் மாகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மேலும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் எஸ்.எஸ். செபஸ்ரியன், வடமாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார், வடமாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பிரேம் காந்தன், மன்னார் பிரதி கல்விபணிப்பாளர் ஜூனைத், மன்னார் கோட்டக் கல்விபணிப்பாளர் வாஸ் கூஞ்ஞை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தவிர்க்க முடியாததன் காரணமாக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் எம்.எம். சியான் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.