தேசிய வன ரோபா மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் இன்று நாடளாவீய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் பொத்துவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் இன்று மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
மரம் வளர்ப்போம் நாட்டைக் காப்போம் எனும் தொனியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத் அவர்களால் முதல் மரக்கன்று நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை செயலாளர் எம்.சீ.எம்.ஹபீபூர் ரஹ்மான், பொத்துவில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜனூஸ், கரையோரம் பேணல் திணைக்கள அம்பாறை மாவட்ட திட்ட உத்தியோகத்தர் சமீர, திவிநெகும முகாமையாளர், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள், கிராம நிலதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.