வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட யாழ் முஸ்லிம்களிற்கு உதவுங்கள்..!

பாறுக் ஷிஹான்-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களிற்கு உடனடியான உதவிகளை வழங்க முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணம் முஸ்லீம் பகுதியில் குறிப்பாக கிராமசேவகர் பிரிவு 87 இல் சுமார் 30 க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் உடைந்து விழுந்துள்ளன.

சில வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.சிலர் இடம்பெயரந்து வருகின்றனர். சில விடுகளில் ஒழுக்கு காரணமாக ஈரத்தில் நனைந்த வண்ணம் உள்ளது.

இதனால் அம்மக்கள் பல்வேறு சொல்லொன்னா துயரங்களை அனுபவிக்கின்றனர்.பார்ப்பதற்கு அம்மக்களின் நிலைமை உள்ளதாக அப்பகுதிக்கு தற்போது சென்றுஉள்ள மக்கள் பணிமனை தலைவர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துப்படி அம்மக்களிற்கு அவசரத்தேவையாக உடுதுணிகள்,கூரைத்தகடுகள்,நுளம்புவலைகள்,கிடுகுகள்,என்பனவும் சில அவசியமான உதவிகளும் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இம்மக்களின் துயர் துடைக்க முன்வருபவர்கள் உடனடியாக மக்கள் பணிமனை தலைவர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளிற்கு-0777381033




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -