அரசாங்கம் செய்யவேண்டிய சேவைகளை சங்கங்கள் செய்வது பாராட்டத்தக்கது - முஜிபுர் ரஹ்மான் பாராட்டு

நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-
ரசாங்கம் செய்யவேண்டிய பொதுமக்களுக்கான சமூகசேவைகளை இளம் முஸ்லிம் மாதர் சங்கமும் கொழும்பு மாவட்ட லயன்ஸ் கழகமும் நடத்துவது குறித்து எனது பாராட்டுதல்களை தெரிவிக்கின்றேன்.அவ்வாறே கண் பார்வைகுன்றிய சுமார் 300க்கும் அதிகமானோருக்கு கண்களைப் பரிசீலித்து இலவச மூக்குக்கண்ணாடிகளை வழங்கிய இளம் முஸ்லிம் மாதர் சங்கத்துக்கும் கொழும்பு மாவட்ட லயன்ஸ் கழகத்துக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

இளம் முஸ்லிம் மாதர் சங்கம் கொழும்பு மாவட்டலயன்ஸ் கழகத்துடன் டுழைளெ உடரடி ழக ஊழடழஅடிழ புசயனெறயல - னுளைவசiஉவ 306டீ1 இணைந்து ஏற்பாடு செய்த இலவச கண் சிகிச்சை முகாம ;கடந்த 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள வை.எம.;எம்.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தும் போதே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மத்திய கொழும்பில் வாழும் மக்களில் 70சதவீதமானோர்; வறுமைக்கோட்டிலேயே வாழ்கின்றனர். எனவே இந்தப் பகுதியில் இந்த இலவச வைத்திய முகாமை நடத்தியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 

கொழும்பு மாவட்டத்தில் உயர்ந்த பாடசாலைகள் எல்லாம் இருந்தும் இங்குள்ளவர்களுக்கு இந்தப் பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதி கிடைப்பதில்லை. வெளியூர்களிலிருந்து வருபவர்களே இவற்றில் கல்வி கற்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது அவசியமாகும். அவ்வாறே கொழும்பு நகரில் 70வீதமான இளைஞர்கள் ஜீ.சீ.Pஈ. சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாதவர்களாக இருக்கின்றனர். அத்துடன் பெரும்பாலான இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இதுகுறித்துகவலையடைகிறேன். 

கொழும்புநகரில் மக்கள் அடிப்படை வசதிகளின்றி பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இவற்றை தீர்த்துவைக்குமாறு நான் பிரதமரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளேன். எனவும் தனதுரையில் குறிப்பிட்டார்.

இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில, செயலாளர் தேசமான்ய மர்ளியா சித்தீக் கொழும்பு மாவட்ட லயன்ஸ் கழக தலைவர் ஒகஸ்டின் பெர்னான்டோ ஆகியோரும் இந்தநிகழ்வில் கருத்துரைகளை வழங்கினர். வை.எம்.எம்.ஏ.பேரவையின் தலைவர் சலீம், முன்னாள் தலைவர் காலித் பாரூக் ,மாதர் முஸ்லிம் சங்க பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹா, ராஸிதாபனூ லூலூ ஜிப்ரி உட்பட சங்க உறுப்பினர் பலரும் இதில் கலந்துக் கொண்டனர்.

இந்த கண் சிகிச்சை முகாமில் ஆண்கள் பெண்கள் என கண்பார்வை குறைந்த சுமார் 300 பேருக்கு கண்கள் பரிசோதிக்கப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. தமிழ் சிங்களம் முஸ்லிம் ஆகிய சகல இனங்களைச் சார்ந்த மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து இந்த கண் சிகிச்சை முகாமில் கலந்துக் கொண்டமை சிறப்பம்சமாகும்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -