உளஹிட்டிவல அல்-மஹ்மூத் வித்தியாலயத்தின் குறைகள் அமைச்சர் றுவான் விஜேவர்த்தனவிடம் தெரிவிப்பு!

எஸ்.அஷ்ரப்கான்-
ளஹிட்டிவல அல்-மஹ்மூத் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான் தலைமையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன்புரி அமைப்பினர்கள் நேற்று முன்தினம் (19) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜேவர்த்தனவை அவரது அமைச்சில் சென்று சந்தித்தனர்.

பியகம பிரதேச சபையின் உறுப்பினர் முஹம்மது இர்பான் அவர்களின் முயற்சியினால் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பாடசாலையின் பல்வேறு குறைபாடுகள், அபிவிருத்தி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதுடன், விரைவில் அவற்றினை நிவர்த்தி செய்வதற்காக பாடசாலைக்கு நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் இதன்போது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -