எஸ்.எம்.அறூஸ்-
மாவட்ட மீனவப் பேரவை ஏற்பாடு செய்த சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டமும், ஊர்வலமும் இன்று(2015-10-01) அட்டாளைச்சேனை பிரதேச செயலத்திற்கு முன்னாள் இடம்பெற்றது.
மாவட்ட மீனவ பேரவையின் இணைப்பாளர் கே.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கூடுதலான பெண்கள் கலந்து கொண்டனர். பிரதான வீதியுடாக ஆரம்பமான ஊர்வலம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வருகை தந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வீ.அதிசயராஜ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் மக்கள் மத்தியிலும் உரையாற்றினார்.
காலை 9.30 க்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டமும், ஊர்வலமும் 10.30 க்கு முடிவடைந்தது. மாவட்ட மீனவ பேரவை மககளின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக கூடுதலான போராட்டங்களையும்,கூட்டங்களையும் நடத்தி வருகின்ற ஒரு அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




