நல்லாட்சியில் இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் அத்தாட்சிகள் அங்கீகரிக்கப் படுவதில்லையாம்!

நல்லாட்சியில் இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் அத்தாட்சிகள் அங்கீகரிக்கப் படுவதில்லையாம்!

முஸ்லிம் அரசியல் வாதிகள் இருக்குமிடத்தில் இருந்து இப்பொழுதே ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரைத் தொடர்புகொள்ளவும்..! அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உடனடியாக உரிய நடவடிக்கையினை எடுக்கும் எனநம்புகின்றோம்.

இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது என பல பட்டதாரி மாணவர்கள் கண்கலங்கி முறையிடுகின்றார்கள்.

சான்றிதல்களின் மூலப்பிரதி ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என வலியுறுத்தி திருப்பி அனுப்பிவிடுகின்றனர், ஜாமியாஹ் நளீமியாஹ் மற்றும் ஓரிரு நிறுவனங்களின் சான்றிதல்கள் அறபு மொழியிலும் ஆங்கிலத்திலும் இருந்த பொழுதும் அவற்றை முஸ்லிம் விவகாரத் திணைக்களம் அத்தாட்சிப்படுத்திய பின்னரும் அதனை வெளிவிவகார கொன்சுலர் பிரிவு அத்தட்சிப்படுத்த மறுக்கிறதாம்.

அரச திணைனைக்கலமொன்றின் முத்திரையை அல்லது அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதிகாரியின் கையொப்பத்தை உறுதிப்படுத்துவதே கொன்சுலர் பிரிவின் பிரதான கடமை.

கொன்சுலர் பிரிவு அத்தட்சிப்படுத்தியதன் பின்னரே அறபு நாட்டு தூதுவராலயங்கள் அவற்றை அத்தாட்சிப் படுத்துகின்றன, உள்நாட்டில் தொழில் வாய்ப்புகளின்றி அல்லலுறும் பட்டதாரிகளின் வயிற்றில் அடிக்கும் மட்டரகமான புதிய வரைமுறைகளை கொன்சுலர் பிரிவு கொண்டிருப்பது வேதனை தருகின்றது.

வெளி நாடுகளில் உயர்கல்வி வாய்ப்புக்கள் பெறும் மாணவர்களுக்கும் கொன்சுலர் பிரிவின் மேற்படி நடவடிக்கை பாரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தருகின்றது.

இந்த விடயத்தை முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகவே வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரல் வேண்டும், அறபுமதரஸாக்கள், உலமாக்கள் நலன் பேணும் ஜம்மியத்துல் உலமா போன்ற அமைப்புக்கள் இந்தவிடயம் குறித்து கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களம் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும், இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும். எந்த மந்திரி தீர்வு பெற்றுத் தருகிறார் என்று இரண்டொரு நாளில் பதிவு வரும் இன்ஷா அல்லாஹ்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -