திருகோணமலை - மதுபானம் அருந்தி விட்டு குழப்பத்தை ஏற்படுத்தியவருக்கு ஆறு மாதம் சிறை..!

எப்.முபாரக்-
டந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாராயம் குடித்து விட்டு குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவருக்கு இன்று புதன் கிழமை(21) ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பள்ளிக்குடியிப்பு,தந்தபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.புஸ்பராசா வயது(36)என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சாராயம் குடித்து விட்டு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதோடு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் சந்தேக நபருக்கெதிராக மூதூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர் குற்றத்தைஒப்புக்கொண்டதால் குற்றவாளியாக இனங்கண்டு 7500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறுமாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -