அட்டாளைச்சேனைக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவேண்டும்- ஹனீஸ்

எம்.வை.அமீர்-
டந்த பலவருடங்களாக தேசியப்பட்டியல் என்ற மாயையால் அட்டாளைச்சேனை மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த தேர்தலிலும் இம்மக்களுக்கு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப் போல் அல்லாது இம்முறை அட்டாளைச்சேனை மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளன தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் தொலைபேசியூடாக தன்னிடமும் உத்தரவாதமளித்துள்ளதாக தெரிவித்த ஏ.எல்.ஹனீஸ், அம்பாறை மாவட்டத்தில் மூன்று பிரதிநிதித்துவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறுவதற்கு அட்டாளைச்சேனை மக்களின் வாக்குகள் பிரதானமாக அமைந்ததை யாவரும் அறிவர் என்றும், இம்முறையும் இம்மக்கள் ஏமாற்றப்படுவார்களானால், மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மீது நம்பிக்யிழப்பது தவிர்க்க முடியாததாகி விடும் என்றும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளன தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனீஸ் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -