காரைதீவில் தமிழர் மகாசபை உதயம் - எதிர்கால திட்டங்கள் விரைவில்..!

சுலக்சன் லோகராஜு-
காரைதீவு ஆலய அறங்காவலர் ஒன்றியத்தின் விஷேட பொதுக்கூட்டமானது நேற்று மாலை 4.00 மணியளவில் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு காரைதீவு ஆலய அறங்காவலர் ஒன்றியத்தினரால் அழைக்கப்பட்ட காரைதீவில் உள்ள சமூக சமய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்விஷேட கூட்டத்தில் காரைதீவின் தற்போதைய நிலமை மற்றும் எதிர்கால அபிவிருத்தி போன்ற விடயங்க்ள் கலந்துரையாடப்பட்டதுடன் இங்கு அனைவரினதும் கருத்துரைகளும் கவனத்தில் கொள்ளப்ட்டு பல்வேறு ஆலோசனைகளும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டது.

பின்னர் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாகவும் தெளிவாகவும் முரண்பாடுகள் அற்றதாக செயற்படுத்த குழு அமைக்கப்பட வேண்டும் என்ற அனைவரினதும் கருத்துக்கமைய காரைதீவில் பின்னர் மகா சபை உருவாக்கப்பட்டது.

இவ்மகாசபையின் நிர்வாக கட்டமைப்பு அமைக்கபட்டு நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிர்வாக கட்டமைப்பு வருமாறு-

தலைவர்-திரு.இ.வேல்நாயகம்
உப-தலைவர்கள்- திரு ச.சுரேஷ்
திரு சி.நந்தேஸ்வரன்
செயலாளர்- திரு த.தமிழ்செல்வன்
இணைச்செயலாளர்- திரு மு.ரமணிதரன்
பொருளாளர்- திரு.மா.சிதம்பரநாதன்

மேலும் காரைதீவில் ஒவ்வொரு கிராமசேவகப்பிரிவில் இருந்தும் ஒவ்வொரு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

காரைதீவு 01- திரு.ம.தயாளன்
காரைதீவு 02-திரு.செ.விஜயரெட்ணம்
காரைதீவு 03-திரு.ஜெகநாதன்
காரைதீவு 04-திரு.யோ.கோபிகாந்
காரைதீவு 05-திரு.க.ராஜேஸ்வரன்
காரைதீவு 06-திரு.கு.ராகவன்
காரைதீவு 07-திரு.சி.ஜெயகாந்தன்
காரைதீவு 08-திரு.சி.ராஜேந்திரன்
காரைதீவு 09-திரு.கி.ஜெயசிறில்
காரைதீவு 10-திரு.ந.ஜீவராஜா
காரைதீவு 11-திரு.இ.குணசிங்கம்
காரைதீவு 12-திரு.மா.புஸ்பநாதன்

மேலும் பல புத்திஜீவிகளைக்கொண்டு ஆலோசனைக்குழு நியமிக்கப்டவுள்ளதுடன் பல்வேறு துறைசார்ந்த தனித்தனி குழுக்களும் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -