ஜனாதிபதி மாளிகையில் அதிசொகுசு நிலக்கீழ் மாளிகை - (படங்கள்)

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிசொகுசு நிலக்கீழ் மாளிகையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த செய்திகள் வெளியானது அறிந்ததே..

தற்போது அதன் படங்களை சிங்கள மொழி இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.

குறித்த நிலக்கீழ் மாளிகைக்கு 24 மணிநேரமும் துண்டிக்கப்பட முடியாத வகையில் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை ராஜபக்ஷவினரே நிர்மாணித்துள்ளனர்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையின் மாதாந்த மின் கட்டணம் ஒன்றரைக்கோடி செலவாகின்றது. அதில் நிலக்கீழ் மாளிகையின் மின் செலவு மட்டுமே முப்பது லட்சம் செலவாகின்றது.

இதன் காரணமாகவே நான் வேறொரு சாதாரண வீட்டை உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்துகின்றேன். எனது தற்போதைய இல்லத்தின் மொத்த பராமரிப்புச் செலவே மாதாந்தம் ஐந்து லட்சம் மட்டுமே செலவாகின்றது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
(நன்றி-மடவளநியூஸ்)




























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -