அடி தாங்க முடியாமல் சேயாவை கொலை செய்ததாக ஏற்றுக்கொண்டேன் - துனேஷ் பிரியசாந்த

சேயா சிறுமியை தான் கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலம் பொலிஸார் என்மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்களை தாங்கிக் கொள்ள முடியாததன் காரணமாகவே என்று கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தெரிவித்தார். 

பொலிஸாரின் தாக்குதல்களை தாங்கிக் கொள்ள முடியாததன் காரணமாக அவர்கள் எழுதிக் கொடுத்த தாள் ஒன்றில் கையெழுத்திட்டதாக கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த மேலும் தெரிவித்தார். 

சேயா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்று பிற்பகல் கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார். 

இந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

என்னை எவருமே கொண்டயா என்று அழைத்ததில்லை என்றும் நண்பர்கள் கூட துனேஷ் என்றே அழைப்பார்கள்.  கொண்டயா என்பது ஊடகங்களால் எனக்கு வைக்கப்பட்ட பெயர் என்று இதன்போது அவர் தெரிவித்தார். 

நண்பர் ஒருவரின் வயலில் வேலை செய்துவிட்டு மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே என்னைக் கைது செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவரது சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்தாவது, 

சிறுவர் துஷ்பிரயோகங்கள் அல்லது வேறு மோசமான சம்பவங்கள் சம்பந்தமான எந்த வழக்குகளும் இவருக்கு எதிராக இல்லை என்று தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -