அமெரிக்க தூதரகத்தினால் நவமணி பத்திரிகை மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றது - என்.எம். அமீன்

சுலைமான் றாபி-

லங்கையின் தினசரிப் பத்திரிகைககளில் ஒன்றான நவமணி பத்திரிகை அமெரிக்க தூதரகத்தினால் மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றது. என நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம். அமீன் நேற்று (23) சாய்ந்தமருது சீ பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற "நவமணியின் ஊடகவியலாளர் சந்திப்பு" நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் முஸ்லிம்களின் தனியான ஊடக இருப்பிற்காகவும், அதன் மூலம் அந்த சமூகம் பெற்றுக் கொள்ளக்கூடிய நற்பயன்களைக் கருத்திற் கொண்டு அதற்காக பல தியாகங்கள் பல புரிந்தமைக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து இங்கு உரை நிகழ்த்திய நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம். அமீன்;

நவமணி பத்திரிகை ஆரம்பித்து அது 20 ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று தனியான ஊடகம் ஒன்றின் தேவையை உணர்ந்தபோது அதனை எப்படியாவது ஆரம்பிக்க வேண்டும் என திடசங்கற்பம் பூண்ட போது அன்று மூன்று பேரினால் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வேளை இலங்கையில் உள்ள முஸ்லிம் தனவந்தர்கள் இந்த பத்திரிகையினை ஆரம்பிப்பதற்கு பொருளாதார உதவிகள் வழங்க முன்வந்த போதும் கடந்த அரசாங்கத்தின் கால கட்டத்தில் அவர்கள் கடத்தப்பட்டு சிலர் காணாமல் போனார்கள். இதனால் நவமணி பத்திரிகையை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க பாரிய தியாகங்களை செய்யவேண்டியேற்பட்டது.

ஆனால் இப்போதும் இந்த பத்திரிகை தினசரிப்பத்திரிகையாக வெளிவந்தாலும், அதனை அச்சிடுவதிலிருந்து இலங்கையில் உள்ள ஒவ்வொருத்தரின் கரங்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதிலும் பாரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இது தவிர இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இருப்பு மற்றும் அவர்களின் பிரச்சினை சம்பந்தமாக தினமும் அமெரிக்க தூதரகத்தினால் நவமணி பத்திரிகை மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றது. எனவே இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களினை இலங்கை முஸ்லிம்களிடத்தில் தோற்றுவிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மேலும், இந்த அரசாங்கத்தில் ஊடகத்துறையில் குறிப்பாக லேக் ஹவுஸில் பணியாற்ற அழைப்பு வந்தபோதும் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி நவமணி பத்திரிகையிலேயே கடமையாற்ற எண்ணியுள்ளதாக குறிப்பிட்டதோடு, எவ்வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் செய்திகளை அனுப்பும் ஊடகவியலாளர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -