கனடா பொதுத்தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி, ராதிகா உட்பட ஐவர் தோல்வி…!

னடாவின் தேர்தல்கள் ஓரளவிற்கு முடிவு பெற்று லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட்ட தமிழர்களின் நிலைமைகளை ஆராய்ந்தால், ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி இத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

இவர் தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு வந்தவர். தந்தையின் தொடர்பில்லாமல் தாயாராலேயே வளர்க்கப்பட்டவர். பல தமிழ் அமைப்புக்களில் உயர் பதவிகளை வகித்ததுடன், இளைஞர்கள் கலாச்சாரா பிரழ்வால் வழிதவறிச் செய்ய முயன்ற போது அவர்களிற்காக உதவும் அமைப்பை ஸ்தாபித்து தமிழ் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகின் தமிழ்த் தலைவர்களின் மதிப்பைப் பெற்றவர்.

ராதிகா சிற்சபைஈசன். இந்தத் தேர்தலில் வெற்றிக் கனியை சில ஆயிரம் வாக்கால் தவறவிட்டுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று புலம்பெயர்ந்த தேசங்களில் முதலாவது தமிழ் பாராளுமன்ற என்ற பெருமையைப் பெற்றவர்.

இலங்கையில் பிறந்து 5 வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள ரொரன்ரோ மாகாணத்தில் குடியேறியவர். இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக விவாகரங்களிலும் அக்கறை கொண்டவர். நுடநஉவழைn_உயயெனய_வயஅடைல-293ஒ150-உழில

போதகர் கந்தரத்தினம் சாந்திக்குமார். ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்றவர். 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறிய சாந்திகுமார், இங்குள்ள தொலைதொடர்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.

மார்க்கம் தோன்கில் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா இத் தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார். தமிழர்களின் விளம்பரங்கள் வெளியிடும் தமிழன் வழிகாட்டி என்ற கைக் கொத்தின் பதிப்பாளராகவுள்ளார்.

ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரத்தினம் லிபரல் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார்.

கனடாவிற்கு 2007ம் ஆண்டு வருகை தந்து பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருபவர். இலங்கையில் பிறந்த இவர் தனது மூன்று வயதில் இந்தியா சென்று அங்கு தனது கல்வியைத் தொடர்ந்திருந்தார்.

பிரம்டன் மேற்குத் தொகுதியில் பசுமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோபிநாத் இத் தேர்தலில் வெற்றிபெறவில்லை.

இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறிய கார்த்திகா குற்றவியல், நீதித்துறையில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். மேலும் பொது கொள்கைகள்இ நிர்வாகம் மற்றும் சட்ட திட்டம் தொடர்பாக முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -