பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா..!

அஸ்ரப் ஏ சமத்-
இந்துக்களின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழா பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

நேற்று காலை சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதம மந்திரி, மீள்குடியேற்ற ஹிந்து விவகார அமைச்சா் ரி.எம் சுவாமி நாதன் , சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் , பாராளுமன்ற பிரதிசெயலாளார் நாயகம் மற்றும் பாராளுமன்ற அலுவலர்கள் இந்து கலாச்சார திணைக்கள அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும், துர்க்கா தேவியை குறித்தும் அடுத்த மூன்று நாட்களும் லக்ஷ்மி தேவியை குறித்தும் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விரதத்தின் கடைசி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

சமய வேறுபாடுகளை மறந்து, இந்நாட்டின் பல்வேறு இன, சமயத்தினரும், இவ்விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தனா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -