எம்.வை.அமீர்,சுலைமான் றாபி-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு 2015” LACE- 2015 எனும் தலைப்பில் வித்தியாசமான ஏற்பாடுகளுடன் மாபெரும் இளைஞர் மாநாடு எதிர்வரும் 2015-10-31 அன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது குறித்து விளக்கமளிக்கும், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று 2015-10-28 ம் திகதி கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் அவர்களது தலைமையில், மாகணசபை உறுப்பினரின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதேவேளை அப்போதைய இளைஞர் சமுதாயத்துக்கு இருந்த சமூக உணர்வுகள் இப்போதைய இளைஞர்களிடம் அருகிவரும் இவ்வேளையில் அவர்களை ஒன்றிணைத்து சமூக உணர்வுக்குள்ளும் எதிர்கால நம் சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் ஆக்கிக்கொள்ளவும் சிறுபான்மையினரின் அரசியலில் முஸ்லிம்களின் வகிபாகத்தை தக்க வைப்பது எவ்வாறு என்பன போன்ற விடயங்களை அலசி ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த மாபெரும் இளைஞர் மாநாடு என்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் நகரங்கள் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களும் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் மற்றும் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைசால் காசீம் பாராளமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பெரிய பட்டாளமே இணைந்துகொள்ளவுள்ள இம்மநாட்டில் கல்வி கலை கலாச்சாரம் மற்றும் ஏனைய துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ‘அஷ்ரப் ஞபகார்த்த விருது’ வழங்கப்படுவதுடன் தொழில் வழிகாட்டல் நிகழ்வுகளும் மதம் சார்ந்த நிகழவுகளும் இடம்பெறவுள்ளன என்று தெரிவித்தார்.