புதிய மைல் கல்லை எட்டியது WhatsApp...!

பேஸ்புக் நிறுவனத்தினால் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட WhatsApp ஆனது உடனடித் தகவல்கள் உட்பட தற்போது குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியையும் தருகின்றமை அறிந்ததே.

இந்த நிலையில் மாதாந்தம் 900 மில்லியன் செயற்படு நிலையிலுள்ள பாவனையாளர்களை (Active Users) WhatsApp எட்டியுள்ளதாக Jan Koum என்பவரால் பேஸ்புக் நிறுவனத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கையானது 600 மில்லியனாக காணப்பட்டதாகவும் 12 மாதங்களில் ஏறத்தாழ 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு வீதத்தில் சென்றால் விரைவில் 1 பில்லியன் செயற்பாடு நிலையிலுள்ள பயனர்களை WhatsApp எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -