கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் எனப்படும் சீஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனம் அரச வளங்களைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அதற்கு மேலதிகமாக ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை முறையான அனுமதிப்பத்திரம் எதனையும் அந்த நிறுவனம் பெற்றிருக்கவில்லை.
வெறுமனே முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த நிறுவனம் வளர்க்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் போது சீஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. எனினும் தொலைக்காட்சி நிறுவனம் இதுவரை குறித்த அபராதத்தொகையை செலுத்தவில்லை.
இந்நிலையில் சீஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தை உரித்தாக்கிக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஆரம்ப நிலைக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான தயா கமகே முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான மத்தியஸ்த முயற்சிகளை ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நெருக்கமான ஒருவர் முன்னெடுத்திருப்பதுடன், பெரும் தொகைப் பணம் விலை பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆதவன்