நிந்தவூர் வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்று வருகிற தாந்தோன்றித்தன நிகழ்வுகளை ஆவணப்படுத்தி கொண்டிருக்கிற போது நாடாளும் நல்லாட்சி நமக்கு இல்லையோ என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி வருவதுண்டு. அப்படியாக நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்வொன்றையே இங்கு பதிவிடுகிறேன்.
ஊரின் பிரபல தொழிலதிபர் ஒருவர் நிந்தவூர் வைத்தியசாலையின் தரமுயர்த்தப்பட்ட விடயம் அறிந்து அவருக்கு ஏற்பட்ட (சாதரண) நெஞ்சு வலி ஒன்றை பரிசோதிக்கச் சென்ற போது அங்கிருந்த வைத்தியர் அவரை ECG எடுக்க சொல்லி இருக்கிறார்.
அவரும் ETU க்குச் சென்று கட்டிலில் படுக்க அங்கிருந்த சிற்றூழியர் ஒருவர் வைத்தியராக அல்லது தாதியாக மாறி ECG யும் எடுத்து விட்டிருக்கிறார்.
எடுக்கப்பட்ட ECG இனை வைத்தியர் பார்த்து விட்டு "ஹே இட்ஸ் மெடிக்கல் மிராக்கள்" என்று கண்களை அகலத்திறந்து பார்த்து விட்டு உங்களுக்கு
"நெஞ்சில் ஏதோ பெரிய கோளாரு ஒன்று இருக்கு, நீங்கள் இப்போதே வைத்தியசாலையில் அனுமதியாக வேண்டும், 4 மாத்திரைகளை இப்போதே போட வேண்டும்"
என்றெல்லாம் பயம் காட்டி இருக்கிறார். சிகிச்சை பெற வந்தவர் வைத்தியர் சொல்கிறாரே என்று மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு, இல்லை நான் தனியார் வைத்தியசாலையில் பார்த்துகொள்கிறேன் என்று கொஞ்சம் தெளிவாக பேசி விட்டு வந்து சாய்ந்தமருது தனியார் வைத்தியசாலைக்குச்சென்று இருக்கிறார்.
அங்கே மறுபடியும் ECG எடுக்கப்பட்டிருக்கிறது, அதைப்பார்த்து விட்டு அங்கு இருந்த படித்த வைத்தியர் இது சாதரண வலி தான் என்று சொல்ல திகைத்துப்போனார் அந்த நபர்.
கையோடு கொண்டு போயிருந்த நிந்தவூர் அதிநவீன வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட ECG இனைக்காட்ட அந்த படித்த வைத்தியர் இது தவறாக எடுக்கப்பட்டு இருக்கிறது என்று ஒற்றைப்பார்வையிலேயே சொல்லி இருக்கிறார்.
(10ஆம் ஆண்டு விஞ்ஞான புத்தகத்த படிச்ச எனக்கே அங்க எடுத்தது பிழை என்டு தெரியுது, அந்த படிச்ச மனுசனுக்கு தெரிஞ்சு இருக்காதா?
இதுல இன்னொரு விஷயம் என்னன்னா பத்திப்பதறி 4 மாத்திரை வேற!!!!!
இதைத்தான் சொல்வாங்க தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சி என்டு தப்பிச்சாறு அந்த மனுசன்)
இது தான் தரமுயர்த்தப்பட்ட வைத்தியசாலையின் நிலை. செல்வந்தரான அந்த நபர் ஏற்கனவே நிந்தவூர் வைத்தியசாலைக்கு பல உதவிகள் செய்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த நபருக்கே இந்த நிலை என்றால் பாமர மக்களின் நிலை என்ன??? எழுதுவதனால் இதனை மாற்ற முடியாது என்பது எனக்கு கவலை அளித்தாலும், என்னுடைய கவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் முயற்சிக்கட்டும் என்று! தேடல் தொடரும்......



