ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாக சீர்திருத்தம் செய்வதற்கு கட்சி தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்து ஆசனங்களின் மட்டத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பிலான யோசனையை கட்சி மத்திய செயற்குழுவில் சமர்ப்பித்து, மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மத்திய செயற்குழுவின் கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
புதிய சீர்திருத்தங்களுக்கு அமைய ஒழுங்கான முறையில் பொறுப்பினை நிறைவேறற்றாத தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக, புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
