ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் வரவேற்பதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதேவேளை நீதி நிலைநாட்டப்படுவதற்கான செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஐக்கிய நாடுகளிற்கு உதவவேண்டும், குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும், இந்த நாட்டு மக்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும், இந்த பரிந்துரைகள் குறித்து நாங்கள் தேவையற்ற விதத்தில் பதட்டம் அடையவேண்டிய தேவையில்லை, எங்களால் இந்த விடயங்களிற்கு சுமூகமான முறையில் தீர்வை காணமுடியும், குறிப்பாக நாடு குறித்த நற்பெயரை காப்பாற்றுவதற்காக.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது, ரவிராஜ் படுகொலை, பிரகீத் விவகாரம் போன்றவை நான் இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியிலேயே இடம்பெற்றன, எனக்கு இது குறித்து தெரியாது, இராணுவத்தினரும், படையினரும் சட்டஅமுலாக்கல் பிரிவினர் என்ற வகையில் இதற்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
