பாலமுனை நிகழ்வு கல்வியமைச்சின் சுற்று நிரூபத்தை மீறவில்லை - மறுப்பு

எஸ்.ஆபத்தின்-
ன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.35 மணியளவில் இம்போர்ட் மிரர் செய்தித் தளத்தில் நம்மூரான் என்ற பெயரில் 'கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு முரணான முறையில் நடைபெற்ற பாலமுனை நிகழ்வு - பெற்றோர் விசனம்' என்ற தலைப்பில் செய்தியொன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அச்செய்தியை 'நம்மூரான்' எனும் புனைப் பெயரில் வெளியிட்டவர் தனது செய்திக் குறிப்பில், அந்நூர் மகாவித்தியாலயத்தின் பேண்ட் வாத்தியக் குழுவினரை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், அப்பிள்ளைகளை நீண்ட தூரம் நடாத்தி வதை செய்ததாகவும், பொருத்தமற்ற நபர்களை வரவேற்பதற்காக பேண்ட் வாத்தியக் குழுவினர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவைகள் கல்வியமைச்சின் சுற்று நிரூபத்தை மீறியுள்ளதாகவும் அதற்காக அறபா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தி தொடர்பில் அல்-அறபா விளையாட்டுக் கழகம் தனது நிலைப்பாட்டினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள முனைகின்றது. அந்தவகையில், இந்நிகழ்வானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வியமைச்சின் சுற்று நிரூபத்தை மீறவில்லை என்பதனை முதற்கண் தெரிவித்துக்கொள்ள முனைகின்றது.

அந்தவகையில், எமது கழகம் பாலமுனைக் கிராமத்தினுடைய கல்வியை மேம்படுத்தும் நோக்கில், பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படுகின்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி கௌரவப்படுத்துவதற்காக வருடாவருடம் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்வது வழக்கமாகும்.

அந்தவகையில், கடந்த 2008ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டு வரைக்கும் பல்கலைக்கு தெரிவாகிய மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி கௌரவம் வழங்குவதற்காக பாலமுனை கடற்கரை திடலில் பிரமாண்டமான நிகழ்வொன்றினை 2015.09.26ம் திகதி பிற்பகல் 4.00 மணியளவில் ஏற்பாடு செய்திருந்தது.

இவ்வைபவத்திற்கான தினமும் நேர ஒதுக்கீடும் மதிப்பிற்குரிய கௌரவ மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ். அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவேண்டுமென்பதற்காக, அவரது வசதிக்கும் விருப்பத்திற்கும் உறுதிமொழிக்கும் ஏற்ப்பவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

அத்தோடு, கௌரவ அதிதியாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம்.ரி நிசாம் அவர்களும், விசேட சொற்ப்பொழிவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர். மதிப்பிற்குரிய பேராசிரியர். எம்.எம்.எம்.நஜீம் அவர்களும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாலமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மௌஜூத் அவர்களும் விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.காசீம் மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ஐ.எம்.ஹனீபா அவர்களும் மற்றும் கல்விமான்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்காகவே பேண்ட் வாத்தியக் குழுவினர் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.காசீம் அவர்களது அனுமதியுடன் அந்நூர் வித்தியாலயத்தின் அதிபர் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில், இவ்விழாவிற்கு குறித்த நேரத்திற்கு அதாவது சரியாக பிற்பகல் 4.00மணிக்கு வருகை தருவேன் என உறுதிமொழி வழங்கிய முதலமைச்சரின் வாக்கிற்கேற்ப்ப, அவரது வருகையை விழா ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

மாகாண முதலமைச்சர் அவர்களையும் அதிதிகளையும் கௌரவம் பெறுகின்ற மாணவர்களையும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்கரை திடலிலிருந்து சுமார் 300மீட்டர் தொலைவிலுள்ள அக்/ஹிக்மா வித்தியாலயத்தின் முற்றத்தில் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்காக பேண்ட் வாத்தியக்குழுவினர், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், பிற்பகல் 4.45மணியாகியும் மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர்கள் வருகை தரவில்லை.

இதனால், எமது கழகமானது குறித்த நேரத்திற்கு சமூகமளித்திருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாலமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மௌஜூத் அவர்களை பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.காசீம் அவர்களையும் உடனடியாகத் தீர்மானித்து தயார்நிலையிலிருந்த பேண்ட் வாத்தியக்குழுவினருடைய உதவியுடன் விழாவினுடைய ஆரம்ப நிகழ்வுகளை திட்டமிட்டவாறு மேற்க்கொண்டனர்.

அத்தோடு, அல்லாஹ்வின் உதவியுடன் இவ்வைபவத்தை எமது பாலமுனைக் கிராமத்து மக்களினது முழுமையான பங்கேற்ப்புடன் வெற்றிகரமாக நடாத்தி உரிய விழாவினுடைய இலக்குகளை எந்தவிதமான தடங்களுமில்லாமல் அடைந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிகழ்வில் கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்தை அல் அறபா விளையாட்டுக்கழகம் எச்சந்தர்ப்பத்திலும் மீறவில்லை. காரணம், முதலமைச்சர் தனது வரமுடியாமையை எந்த சந்தர்ப்பத்திலும் முன்கூட்டி கூறவில்லை. அத்தோடு, பாடசாலை மாணவர்களைக் கொண்டு பாடசாலை தினங்களில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அவர்களைப் பயன்படுத்துவதனையே சுற்றுநிரூபம் அனுமதியளிக்கவில்லை. ஆனால், இந்நிகழ்வு விடுமுறை தினமான நேற்று சனிக்கிழமையிலேயே நடாத்தப்பட்டது.

அத்தோடு, வரவேற்பு இடம்பெற்ற இடத்திற்கும் விழா மேடைக்கும் சுமார் 600 மீட்டர் தூரம் என்று குறிப்பிட்டுள்ளமையானது குறித்த செய்தியாளருக்கு ஒரு மீட்டர் தூரத்தின் அளவு பற்றிய அறிவு தெரியாமலிருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

அத்தோடு, அச்செய்தியாளர் குறிப்பிடுவது போன்று, இவ்வைபவத்தில் கலந்துகொண்ட எந்தவொரு பெற்றோரும் விசனம் தெரிவிக்கவில்லை. மாறாக தங்களது சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் ஆதரவினையுமே எமக்கு தெரிவித்தனர்.

ஆனால், இச்செய்தியை தனது சொந்தப் பெயரில் வெளியிடுவதற்கு வக்கில்லாத, நெஞ்சுரமில்லாத ஒரு கோளையான இவர் ஒரு ஊடகவியலாளர் என்பதை மாத்திரம் நமக்கு ஊகிக்க முடிகின்றது.

அத்தோடு, இந்நபருக்கு ஒரு ஊர் அல்லது ஒரு கழகம் இவ்வாறான சிறந்த நிகழ்வுகளை சமூக நலன்கருதி ஏற்பாடு செய்வதும் அதனால் சந்தோசமடைவதும் அவருக்கு எப்போதும் ஒவ்வாத தன்மையையே ஏற்ப்படுத்துவதுண்டு. இவ்வாறான நிகழ்வுகள் எல்லோரையும் விட இவருக்கே விசனத்தையும் கவலையையும் உண்டு பண்ணியிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தனது வயிற்றுப் பிழைப்புக்காக இவ்வாறான முரண்பாடான செய்திகளை வெளியிட்டு சமூகத்தில் குழப்பங்களை தோற்றுவிக்க முயலும் இவ்வாறான செய்தியாளர்கள் தொடர்பில் மக்கள் விளிப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென அல்-அறபா விளையாட்டுக்கழகம் இச்சந்தர்ப்பத்தில் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -