கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு முரணான முறையில் நடைபெற்ற பாலமுனை நிகழ்வு -பெற்றோர் விசனம்

நம்மூரான் -

பாலமுனை அறபா விளையாட்டுக் கழகம் நடாத்திய பாராட்டு நிகழ்வில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய பேண்ட் வாத்தியக்குழு பயன்படுத்தப்பட்ட விதம் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு முரணானது
என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நிகழ்வில் பாடசாலையின் பேண்ட் வாத்தியக்குழு பயன்படுத்துவதென்றால் அந் நிகழ்வில் ஜனாதிபதி அல்லது பிரதமர் பிரதம அமைச்சர்கள் கல்வி அமைச்சர் மாவட்ட அமைச்சர்கள் கலந்து கொள்ளும் போதுதான் பயன்படுத்த முடியும் என்பது கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று சனிக்கிழமை (26) மாலை 4.30 மணிக்கு பாலமுனை அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி அதிகாரிகள் மற்றும் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு முரணான வகையில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய பேண்ட் வாத்தியக் குழுவினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சின்னப்பாலமுனை பிரதான வீதியில் உள்ள அல்-ஹிக்மா வித்தியாலய முன்றலில் இருந்து நிகழ்வு நடைபெறும் துறைமுக அருகாமையில் உள்ள விழா மேடைக்கு சுமார் 600
மீற்றர் வரை இந்த பேண்ட் வாத்திய குழு மாணவர்கள் நடையில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் சென்றதை குறிப்பிட்டு ஆக வேண்டும்.

மேலும் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை மீறி நீண்ட தூரம் மாணவர்களை இவ்வாறு பயன்படுத்தியதுடன் விசனத்தை தோற்றுவித்துள்ளது.

தற்போது ஹஜ் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வரும் இதேவேளை இம் மாணவர்களின் சுதந்திரம் முற்றாக பாதிக்கப்பட்டமை கண்டனத்திற்குரிய விடயமாகும்.

இதேவேளை பாலமுனை அறபா விளையாட்டுக் கழகம் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு பதிவு செய்யப்பட்ட கழகமாகும். இன்று கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு மாறாக நடைபெற்ற இம் முறைகேட்டினை சம்மந்தப்பட்ட
அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -