க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்ககோரி அட்டன் பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 27.09.2015 அன்று காலை 10.30 மணிக்கு கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனமும் நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமிய தலைவர்கள் ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்தனர்.
இதன்போது 5000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கையொப்பம் பெறப்பட்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், பிரதமர் அவர்களுக்கும் அதேபோல தொழில் அமைச்சர்களுக்கம் ஏனைய சம்மந்தப்பட்ட தொழிற்சங்க வாதிகளுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமியத்தின் தலைவர் டி.வி.ஜேயந்திரன் தெரிவித்தார்.
சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற பாதாதைகளை ஏந்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் சுமார் 1 மணிநேரம் இடம்பெற்றது.