ஹாசிப் யாஸீன்-
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதையிட்டு கல்முனை எவரெஸ்ட் வெட்மின்டன்ட் விளையாட்டுக்கழகம் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸினை வாழ்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை (27) ஞாயிற்றுக்கிழமை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை எவரெஸ்ட் வெட்மின்டன்ட் விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகத்தினரும், வீரர்களும் கலந்து கொண்டு பிரதி அமைச்சருக்கான நினைவுச் சின்னத்தினை இணைந்து வழங்கி வைத்தனர்.
