ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 30ம் அமர்வு நடைபெறவுள்ளது.
இந்த அமர்வுகளில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 23ம் திகதி அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி அமெரிக்க நேரம் காலை 9.45 அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் அவர் சந்திப்புக்கைள நடாத்த உள்ளதாகத் தெரிவிக்க்பபடுகிறது.
