மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேரில் விஜையம் செய்யவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச காரியாலங்களின் வேலைத்திட்டங்கள் அங்குள்ள குறைபாடுகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை நேரில் கண்டறிந்து தீர்வினைப்பெற்றுக்கொடுக்குமுகமாக முதலமைச்சரின் இப்பயணம் அமையவுள்ளதாக முதலமைச்சரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தொடற்சியாக இடம்பெறவிருக்கும் இவ்விஜையம் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை 08.09.2015 யில் இருந்து 11.09.2015 வரை தொடற்சியாக சகல மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைகள், கல்வித் திணைக்களம், போக்குவரத்து அதிகார சபை, கிராமிய அபிவிருத்தி சபை, கைத்தொழில் திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், கட்டிடத்திணைக்களம் போன்ற வற்றுக்கு விஜையம் செய்யவுள்ளதாகவும்
குறிப்பிட்ட விஜயத்தின்போது ஆளணிப்பற்றாக்குறை சம்மந்தமாகவும் ஆராய்ந்து ஆட்களை நியமிப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சரின் குறிப்பிட்ட விஜையத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் , அரச அதிகாரிகள் பலரும் விஜையம் செய்யவுள்ளதாக முதலமைச்சின் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
