மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, குறித்த மாகாணங்களிலும் வெற்றிடமாகவுள்ள முதலமைச்சர் பதவிகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேல் மாகாண சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியை இன்று பிற்பகல் 3 மணியளவில் சந்திக்கவுள்ளனர்.
முதலமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் காரணமாக அந்த பதவி வெற்றிடமாகியுள்ளது.
எவ்வாறாயினும், 6 உறுப்பினர்கள் முதலமைச்சர் பதவிக்கான தகுதியை பெற்றுள்ளனர்.
அவர்களில் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி முதன்மை வகிக்கின்றார்.
இதனையடுத்து வடமேல் மாகாண சபையின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை மாலை 4 மணியளவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
முதலமைச்சராக இருந்த தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பின்னர் தோன்றியுள்ள வெற்றிடத்தை நிரம்பும் வகையிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
வடமேல் மாகாண சபை முதல்வருக்காக சில பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும், வட மேல் மாகாண சபையின் தவிசாளர் தர்மசிறி தசநாயக்க முதன்மை வகிக்கின்றார்.
