ஹாசிப் யாஸீன்-
உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் அபியா குறூப் நிறுவனத்தினால் கழிவு டயர்களை அரைத்து பவுராக்கும் தொழிற்சாலை நேற்று வியாழக்கிழமை (24) நிந்தவூரில் திறந்து வைக்கப்பட்டது.
இத்தொழிற்சாலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அபியா குறூப் நிறுவனத்தின்; முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.அஷ்ரஃப் உள்ளிட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


