எம்.வை.அமீர் -
யஹ்யாகான் பெண்டேசனின் ஒன்றுகூடலும் புதிய நிர்வாகிகள் தெரிவும் 2015-09-23 அன்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
யஹ்யாகான் பௌண்டேசன் அமைப்பின் ஆயுட்கால தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர்பீட உறுப்பிரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருலாளருமான தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஸி.யஹ்யாகான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் உப தலைவர் ஏ.ஆர்.அஸ்மி காரியப்பர் , செயலாளர் முஹம்மட் றியாழ் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், புத்திஜீவிகள், தொழில்சார் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யஹ்யாகான் பௌண்டேசன் ஆயுட்கால தலைவரினால் எதிர்காலத்தில் இந்த அமைப்பினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி மிக தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் தமது கல்வியினை தொடர முடியாமல் கஸ்டப்படும் ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு கூடிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



