இளைஞர்களின் விந்தணுவை கொடுத்தால் ஐ-போன் கிடைக்கும் பரபரப்பு...!

சீனாவில் உள்ள ஷாங்காய், ஹுபேய், ஜியாங்சு உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த இளைஞர்கள் அப்பிள் போனை வாங்க தங்களுடைய விந்தணுவை விற்பனை செய்ய முயன்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் 25-ம் திகதி IPhone 6S என்ற மொடல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மொபல் போனை வாங்குவதற்கு தான் சீன இளைஞர்கள் அபாயகரமான முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஷாங்காயில் உள்ள விந்தணுவை சேமிக்கும் வங்கி ஒன்று : 

"இனி சிறுநீரகத்தை விற்பனை செய்ய வேண்டாம். உங்கள் விந்தணுவை எங்களிடம் விற்பனை செய்தால் அப்பிள் போன் வாங்கும் உங்கள் கனவை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்" 

என அதிரடி விளம்பரத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 17 மில்லி லிட்டர் அளவுள்ள விந்தணுவை விற்பனை செய்யும் நபருக்கு 606 பவுண்ட் வழங்கப்படும்.

விந்தணுவை விற்பனை செய்ய வரும் இளைஞர்கள் அவசியம் பல்கலைகழக கல்வி பெற்று 5.5 அடி உயரத்தில் இருக்க வேண்டும் என அந்த வங்கி தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஷாங்காய் விந்தணு சேமிப்பு வங்கியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் :

தாங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய விந்தணுவை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை சுமார் 27 சதவிகித ஆண்கள் தங்களுடைய விந்தணுவை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாகவும், பல இளைஞர்கள் விந்தணுவை விலைக்கு வாங்கும் வங்கிகளின் முகவரிகளை தெரிந்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -