எம்.ஜே.எம்.சஜீத்-
புனித குர்ஆனை மனனம் செய்யும் பணிக்கு உதவுவர்களை இறைவன் ஒரு போதும் கை விடமாட்டான். இவ்ஹாபிழ்களின் உருவாக்கத்தினால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து வாழும் நிலை உருவாகும் என காத்தான்குடி ஜாமிய்யத்துல் பலாஹ் அரபிக்கல்லூரியின் செயலாளர் மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அக்கறைப்பற்று அல் - முகர்ரமா ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாவில் ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழா தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.எம். அப்துல் றாசிக் (காஹிரி) தலைமையில் நடை பெற்ற போது கலந்து கொண்டு பேசுகையில் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
மருதமுனை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, சம்மாந்துரை, இறக்காமம் , அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, பொத்துவில் போன்ற பிரதேசங்களை சேர்ந்த 13 ஹாபிழ்கள் பட்டம் பெற்றனர்.
இந்நிகழ்வில் ஜாமிய்யத்துல் பலாஹ் அரபிக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம். அமீன் (பலாஹி), கிழகிலங்கை அரபிக்கல்லூரியின் அதிபர் மௌலவி எம்.எம்.ஏ. லெத்தீப் (பஹ்ஜி) உட்பட உலமாக்களும் ,உயர் அதிகாரிகளும், கல்விமான்களும் கலந்து கொண்டனர்.






