சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமுக்கு வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் வாழ்த்து..!

அபு அலா –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையினால் மீண்டும் ஒரு பிரதி அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமுக்கு கிடைத்துள்ளது. அதுமாத்திரமல்லாமல் அதன் கொள்கைகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக நோக்கப்பட வேண்டிய தருணமாக நோக்க வேண்டியுள்ளது என அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

அவர் தனது வாழ்த்தில்,

சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் கடந்த காலங்களில் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் எவ்விதமான பாகுபாடுகளுமின்றி அம்பாறை மாவட்டத்தையும் தான்டி மூவின மக்களுக்கும் சேவையாற்றி அனைவரது நன் மதிப்பை பெற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவராவார்.

அவருக்கு தற்போது சுகாதார, சுதேச வைத்தியம் மற்று போசாக்கு பிரதி அமைச்சர் பதவி கிடைத்திருப்பதை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்ற வகையிலும், அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் சார்பாகவும் பெருமிதமடையும் இதேவேளை எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேம். 

எமது நாட்டின் அடையாளமாய் பேசப்படுகின்ற சுகாதாரத் துறையை வளர்ப்பதன் ஊடாக எமது சமூகத்திற்கும், தேசியத்திற்கும் ஒரு பொருத்தமான சேவையை வழங்கி அதற்கு வளர்ச்சியை கண்டுகொள்ள வைக்கும் ஒரு ஆற்றலுடையவர் என்பதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது.

இலங்கையில் எதிர்கால முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளப் போகின்ற சவால்களை வெற்றி கொள்ளக் கூடிய தகுதிவாய்ந்த ஒரு தலைமையுடன் இணைந்து கொண்டு சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் செயற்படுவார் என்பதில் எவ்விதமான ஐயமும் யாருக்கும் இருக்க முடியாது.

சுகாதார பிரதி அமைச்சராக பொறுப்பேற்ற பைசால் காசிமின் நீண்ட ஆயுளுக்கும், தீர்க்கமான முடிவுகளை பெறுவதற்கான உடல் நலத்தையும் இறைவன் வழங்கி, எமது மக்களுக்காய் தன்னை அர்ப்பணிக்கும் என்னத்தை வலுப்படுத்த இறைவனை வேண்டுவதுடன், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் சார்பாக வாழ்த்துக்களை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தனது வாழ்த்துச் செய்தியில் தேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -