கணவரின் தம்பிக்கு குழந்தை பெற்றதில் என்ன தவறிருக்கிறது -நீதிமன்றை அதிரவைத்த கேள்வி

பிரேம் நசீர்-
முக அக்கறையுள்ளவர்கள் மாத்திரம் பாருங்கள்

இன்று, ஒரு சிலர் அவசரப்பட்டு எடுக்கும் முடிகளால் “காதி நீதி மன்றம்” நிறைந்து வழிகிறது
எங்களுடைய சமுதாயத்தில் அளவுக்கதிகமான “தலாக்”குகள் இடம் பெருவதற்கான பல காரணங்களை கூறலாம்.

அவசரப்புத்தி, ஒருவருக்கொருவர் புரிந்துனர்வு அற்ற தன்மை, விட்டு கொடுக்கும் மனப்பான்மையில்லாமை,குடும்பத்திலுல்ல மூத்தவர்களின் தப்பான அறிவுரை,சந்தேகம்,கள்ளத்தொடர்பு….இப்படி அடிக்கிக் கொன்டே போகலாம்.

முன்பு கள்ளத் தொடர்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் வருவது மிகக்குறைந்தே காணப்பட்டது. எப்போது பெண்களுடைய கையில் தொலைபேசி கிடைத்ததோ, அப்போதே தொடங்கி விட்டது இவ்வாறான சமுக சீரழிவு.
இன்று காதி நீதி மன்றத்திற்கு அவ்வாரான வழக்குகள் அதிகமாக வரத்தொடங்கி விட்டது.

தனது கணவன் வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பணத்தில் சொகுசாக வாழ்வது மாத்திரமல்லாமல் கள்ளத் தொடர்புகளையும் வைத்துக் கொண்டிருப்பதை நானும், நீங்களும் கண்டும்,கேள்விப்பட்டுமுள்ளோம்.
அவ்வாரான பல சம்பவங்கள் கணவன்மார்களுக்கு தெரியாமல் மூடிமறைக்கப் படுகிறது. அது தெரிய வரும் போது காதி நீதி மன்றம் வரை சென்று கடைசியில் விவாகரத்தில் முடிகிறது.

கள்ளத் தொடர்புகளை இன்று ஒரு சிலர் பகிரங்கமாகவே செய்ய துணிந்து விட்டார்கள். தான் செய்வது ஹராம் என்பது கூட நினைப்பதில்லை. ஹராத்தை செய்து செய்து இன்று ஹராமே ஹலாலாக தெரிகிற சமுதாயமாக நாம் வாழ்ந்துக் கொன்டிருக்கிறோம்.

இதை ஏன் கூறிப்பிடுகிறது என்றால்,அண்மையில் காதி நீதி மன்றத்தில் நடந்த வழக்கொன்றை சுருக்கமாக தருகிறேன். அப்போது நீங்களும் புரிந்து கொள்வீர்கள் நான் கூறிப்பிடுவது உண்மையென்று.
இப்படி ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தைகளை அப்பெண் கூறினாள். இதை கேட்டுக் கொண்டிருந்த பலரும் முகம் சுழிக்குமளவுக்கு அவள் நடந்துக் கொண்டாள்.

இங்கு அந்த அசிங்கத்தின் அடையாள சின்னமான அக்குழந்தை இருந்ததால் அந்த ஆனின் பக்கம் நியாயமான தீர்ப்பு கிடைத்தது.
ஆனால்,பல கள்ள தொடர்புகள் நிருபிக்க முடியாமல் போனதால் சம்பந்தப்பட்ட அந்த ஆணின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.தலாக் கொடுக்கா விட்டால் அவளோடு சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம். தலாக் கிடைத்து விட்டால், மாதாந்தம் செலுத்த வேண்டிய தண்டப் பணம்.
இவ்வாறான சம்பவம் ஏற்பட்ட ஒருவர் கூறினார்” நான் வெளி நாட்டிலிருக்கும் போது மனைவி இன்னொருவரோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்தால்.  காதி மண்றத்தில் என்னால் இதை நிருபிக்க முடியாது போனது. தலாக் கிடைத்து விட்டது.

ஆனால் தண்டப் பணம் கட்ட வேண்டியதாயிற்று. வெளி நாட்டிலிருந்து அனுப்பிய பணத்தில் இவள் விபச்சாரம் செய்தால். தற்போது நான் கொடுக்கும் தண்டப் பணத்தில் அதே தவறையே செய்வாள். அதற்கு நான் கூறினேன் காதி நீதி மன்றத்தில் இஸ்லாமிய முறைப்படியே தீர்ப்பு வழங்கப் படுகிறது. விபச்சாரம் சம்பந்தமாக சாட்சியே முக்கியம். இதையே தான் இஸ்லாம் கூறுகிறது” என்றேன். அதை அவரும் ஏற்றுக் கொன்டார்.

இவ்வாறு பல அசிங்கங்கள் அங்கு அரங்கேறுகிறது..!
கிழமைக்கு ஆகக்குறைந்தது 10 தலாக் வழக்குகள் ஒவ்வொரு காதி நீதி மன்றங்களிளும் தாக்கள் செய்யப் படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது
அன்னிய மதத்திரோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 100பேர் கொன்ட ஊரில் ஆகக் குறைந்தது இரண்டு பேரை மாத்திரேமே விவாகரத்து பெற்றவர்களை கானலாம். ஆனால்,எங்களுடைய முஸ்லிம் சமுதாயத்தை பார்க்கும் போது எங்களுடைய குடும்பத்தில் ஒருவராவது இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவ்வாறு தலாக்குகள் கூடியதற்கு யார் பொறுப்பு ? உலமாக்களின் வழிகாட்டல்கள் பள்ளியோடு மட்டுப்பட்டு இருப்பதாலா?குடும்பத்தின் பெரியவர்களின் அசமந்த போக்கா? எதை கூறுவது.
எனதன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே! இதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பது முஸ்லிம்களாகிய எங்களுடைய கடமையல்லவா.

கண்ணியம் மிக்க உலமாக்களே! ஊர் பெரியார்களே! புத்தி ஜீவிகளே! இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யக் கூடாதா...?
ஓ..அல்லாஹ்வின் அடிமைகளே! நீங்கள் அல்லாஹ்ஹுவுக்கு அஞ்சி அடிபனிந்துக் கொள்ளுங்கள்.புத்தளம் நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -