சபாநாயகராக கரு ஜயசூரிய - ஹக்கீம்,றிஷாட்,விமல், வாசு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதன் முதல் அங்கமாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு முன்மொழியப்பட்டது.

அதனையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா அதனை வழிமொழிந்தார்.

இதேவேளைம் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கரு ஜயசூரியவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதி­யுதீன் ஆகியோர் சபையில் வைத்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -