புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி ஒலுவில் கலாசாரப் பாரம்பரிய விளையாட்டு விழா

புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி ஒலுவில் எப்.ஓ.பி-94 அமைப்பினால்ஏற்பாடு செய்யப்பட்ட கலாசாரப் பாரம்பரிய விளையாட்டு விழா நாளை (26) ஒலுவில் அல்-ஹம்றா விளையாட்டு மைதானத்தில்இடம்பெறவுள்ளது.

அமைப்பின் தலைவர் கே.எம்.சமீம் தலைமையில் காலை 8.30 மணிக்குநடைபெறவுள்ள இந்நிகழ்வின்போது கிழக்கு மாகாண முதலமைச்சரின்செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிஏ.எல்.எம்.ஜெமீல், ஒலுவில் கடற்படை நிலையப் பொறுப்பதிகாரி லெப்ரின்ற்கொமாண்டர் பி.ஆர்.எல்.ரத்நாயக்க, ஒலுவில் இராணுவ முகாம் நிலையப்பொறுப்பதிகாரி பி.எம்.ஏ.பி.வி.சமரகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர்கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது 25 இற்கு மேற்பட்ட இஸ்லாமிய கலாசார பாரம்பரியவிளையாட்டுக்கள் நடைபெறவுள்ளதோடு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -