எம்.வை.அமீர்-
புலம்பெயர் மக்களின் வாக்குரிமை கோரிக்கையை முதன்மைப் படுத்திய ஜே.வி.பி ற்கு நன்றி தெரிவிப்பதாக புலம்பெயர் தொழிலாளர் அமைப்பின் பிரதம அமைப்பாளர் ரகீப் ஜாபர் அறிக்கை ஒன்றின் ஊடாக செய்திவெளியிட்டுள்ளார்.
புலம்பெயர் மக்களின் வாக்களிப்பு வசதியை செயற்படுத்த பாராளமன்றக்குழுவை அமைக்குமாறு மக்கள் விடுதலை முன்னனணி தேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தனது 20 அம்சக் கோரிக்கைகளில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். மேலும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டணி ஐ அமைத்து நாங்கள் இதற்காக குரல் கொடுத்து வருவதும் யாவரும் அறிந்ததே. அண்மையில் ஜே.வி.பி தலைவரையும் சந்தித்து இது பற்றி நாம் கலந்துரையாடினோம். இது எமது பயணத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமும் வெற்றியுமாகும்.
இன்று இதை ஒரு தேசிய பேசு பொருளாக மாற்றுவதற்கு ஆதரவளித்த ஊடகங்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு. மேலும் இது வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல் செயற்பாட்டில் காணும்வரை எமக்கு தோள் கொடுத்து உதவுமாறும் அனைத்து அரசியல் தரப்பினர்களையும் புலம்பெயர் அமைப்புகளையும் தயவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
மேலும் தேர்தல் ஆணையகத்தின் பதிலிற்கினங்க தேர்தல் ஆணையகம் இது சம்பந்தமாகபாராளுமன்றத்திற்கு ஒரு பரிந்துரையை தற்போது அனுப்பியுள்ளது. எனவே இதை செயற்படுத்தும் பொறுப்பு இன்று இறுதியாக பாரளுமன்றதிடம்தான் உள்ளது. பலவீனமுள்ள புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு விமோசனமாக இந்த கோரிக்கையை பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என்று உறுதியான நம்பிக்கை எம்மிடம் உள்ளது. என்றும் தெரிவித்தார்.
