சியாத் அகமட்லெப்பை-
அறைநூற்றாண்டு காலமாக பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் விவசாய மற்றும் குடிநீர் சம்மந்தமாக பொத்துவில் ஹெட ஓயா குழுவின் ஏற்பாட்டில் (18) மாலை 4:00மணியலவில் கேட்போர்கூடத்தில் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது.
இக்கருத்தரங்கில் பிரதம அதீதிகளாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸர்ரத் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர் WUJ.சிறிவர்த்தன மற்றும் உலமாக்கள்,விவசாயக் குழுக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதிர்ஸ்டக்குழந்தை என கனிக்கப்படடும் ஹெடஓயாத்திட்டத்தை இன்று நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை சரியாகப் பயண்படுத்தி இவ் நல்லாட்சியில் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்றே இடம் பெற்றது.
இதில் பொத்துவிலுக்கான பல திட்டங்கள் யார் பதிவு வைப்பது எனும் போட்டியில் கருச்சிதைவு செய்யப்பட்டதைப் போன்று இத்திட்டமும் கருச்சிதைவு செய்யப்படாமல் இருப்பதற்கான பல நுட்பமான ஆலோசனைகள் ஹெடஓயா அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்டதுடன் ஹெடஓயா என்றால் என்ன? அதனால் எவ்வகையான நன்மைகள் உள்ளது? சேதம்கள் உள்ளது? என முழு விளக்கமும் வழங்கப்பட்டது.
ஹேடஓயா திட்டத்தினால் பெற்றுக் கொள்ளும் நீரினால் பானமை, பொத்துவில், லகுகல போன்ற அனைத்து பகுதிகளிலும் இருக்கின்ற சகல கானிகளிலும் விவசாயத்தை செய்ய முடியும் என்றும் இதனால் நாட்டின் அபிவிருத்தி உயர்வடையக்கூடும் என்றும், மற்றும் முன்னேற்றமடைந்து வரும் அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் இடம்பெற்று வரும் குடி நீர் பிரச்சனைகளும் இல்லாதொளியும் என கருத்தரங்கில் கலந்து கொண்ட நூற்றுக்கும் அதிகமான மக்கள் தங்களது கருத்தினை தெரிவித்தனர்.
மேலும் இவ்விடயம் சார்பாக அமைச்சரவையில் பேசுவதற்கான அரசியல் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளாதவாறும், அரசியல் அனாதைகளாக வாழும் குறிப்பிட்ட பானமை, பொத்துவில், லகுகல பகுதிகளில் வாழும் மக்களின் பிரச்சனைகள் அமைச்சரவையில் பேசப்பட வேண்டும் என்றும் இவ்நல்லாட்சியின் பிரதமர், மற்றும் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் உட்பட அமைச்சர்களும் கருத்தில் கொண்டு ஒன்றினைந்து குறித்த அதிர்ஸ்டக் குழந்தை எனும் ஹெடஓயா திட்டத்தினை பொத்துவில் பகுதிக்கு பெற்றுத்தருமாறு குறிப்பிட்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயக் குழுக்கள், உலமாக்கல், பிரதிநிதிகள், அமைப்புக்கள், பொதுமக்களின் கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தனர்.
ஒருமணி நேரம் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கு இரண்டு மணிநேரமாக நீடித்தது பொத்துவில் மக்களின் அதிர்ஸ்டக் குழந்தை எனும் ஹெடஓயா. என்பது குறிப்பிடத்தக்கது.




