வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை கல்வி அமைச்சு அறிவிப்பு ..!

ஜே .எம் .வஸீர்-

முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச் .ஏ ஹலீம் அவர்கள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு விடுத்த வேண்டுதலுக்கமைய ஹஜ்ஜு பெருநாள் முடிந்து மருதினம் அதாவது எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2015.09.25 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப்பிரிவின் பணிப்பாளர் இசெட் .தாஜுதீன் தெரிவித்தார்.

ஹஜ்ஜுப்பெருநாள் வியாழக்கிழமை வருகின்றமையால் வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் மு.ப 11.30 மணிக்கு முடிவுருவதனால் பாடசாலைகளில் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் வருகை மந்தகதியில் காணப்படும் என்பதனாலேயே இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இவ்விடுமுறை வழங்கப்பட்ட தினத்தை ஈடுசெய்துகொள்ளுமுகாமாக எதிர்வரும் 2015.10.03 சனிக்கிழமையான விடுமுறை தினத்தில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாகவே இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான சுற்று நிரூபம் மாகான கல்விப்பணிப்பாளர்கள் ஊடாக நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் இசெட் .தாஜுதீன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -