க.கிஷாந்தன்-
நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தையொன்று 21.09.2015 அன்று காலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 6 வயது நிரம்பிய இந்த சிறுத்தை 3.5 அடி உயரமும் 6 அடி நீளமும் கொண்டுள்ளதாக வன ஜீவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காட்டில் வேட்டையாட வைத்திருந்த மின் கம்பியில் சிக்குண்டு மேற்படி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுத்தையை மின்னேரியா கிரித்தலை பகுதியில் உள்ள வன ஜீவ அதிகாரிகளின் பயிற்சி நிலையத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக நுவரெலியா-ஹக்கல வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வன ஜீவ அதிகாரி சந்தன அபேவர்தன தெரிவித்தார்.