இருபத்து ஆறு வயது இளைஞர் ஒருவர் தனது தாயை மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி இலக்கம் பதினாறு இரண்டாம் ஒழுங்கை நாவலை வீட்டில் தடுத்து வைத்திருப்பதாக வெலிக்கடை பொலீசில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தாகவும் அந்த வீட்டில் இருந்த குறித்த பெண்மணியை விசாரணைக்கு உற்படுத்திய போது அவர் தனது சொந்த விருப்பத்தில் அங்கு தங்கியிருப்பதாகவும் அவரை எவரும் அங்கு தடுத்து வைக்கவோ கடத்திவரவோ இல்லை எனவும் சம்பத்துடன் தொடர்புடைய நான்கு பிழைகளின் தாயான குறித்த பெண்மணி தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு அசாத் சாலியின் மகள் ஆமினா சாலி தனது தந்தை தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு ஒன்றை வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடு விசாரணை செய்யும் பொலிசார் அது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள ஆசாத் சாலி அவர்களுக்கு வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நேற்றைய சம்பவத்தின் போது அசாத் சாலியின் மகள் மற்றும் மனைவியும் சம்பவ ஸ்தலத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது .
மடவளை நியுஸ்
