அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது என்ற 14 வயது மாணவ சிறுவன் சின்னஞ்சிறு வயதிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மீது மிகுந்த ஆர்வமுடையவர் இவர் தன் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுயமாக தயாரித்த கடிகாரத்தை, தன் சக மாணவர்களிடம் காண்பிப்பதற்காக பள்ளிக்கூடம் எடுத்து சென்றுள்ளார்.
இதனை கண்ட பள்ளி ஆசிரியை வெடிகுண்டு போன்று இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தார் உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்து காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர். பின்னர் விசாரித்து கடிகாரம்தான் தயாரித்துள்ளார் என்பதை அறிந்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர்.
இது குறித்து சிறுவன் அளித்த பேட்டியில் 'ஒரு போலிஸ் அதிகாரியும், பிரின்சிபாலும், என்னை 5 போலிஸ் அதிகாரிகள் உள்ள ஒரு அறைக்கு கூட்டிச் சென்றார்கள்', மேலும், ' நீ குண்டு தயாரிப்பதற்காக இதை செய்தாயா', என்று திரும்ப திரும்ப கேட்டார்கள் ஆனால், நான் திட்டமாக அதை மறுத்து என்னுடய நோக்கம் கடிகாரம் செய்வது தான் என்று கூறினேன்.பின்னர் சிறைக்கழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டேன் என்றார்
உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவ சிறுவன் அஹமது கைதானதை கண்டித்து கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா டிவிட்டர் பக்கத்தில் மாணவ சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பேஸ்புக் நிறுவனர் உள்ளிட்ட சர்வதேச அளவில் முன்னணி நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மாணவ சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கர்கள் அந்த சிறுவனுக்காக ஹேஷ் டேக் உருவாக்கி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்
