ஐ.நாவின் அறிக்கை ஒரு பக்கம் சார்பானது - அச்சத்தில் விமல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நேற்று, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது,ஒரு பக்கம் சார்பானதாக இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றியப் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையானது இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சார்பானது. ஆனால் விடுதலை புலிகள் பலர் இன்று உயிருடன் இல்லை.

ஆகவே இவ்வறிக்கையானது ஒரு பக்கம் சார்பானதாகவே காணப்படுகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியப்பட்டுள்ள, கலப்பு நீதிமன்றத்தினை நிராகரித்த இவர், அத்தகைய நீதிமன்றம், ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் பேரவையின் ஒரு கிளையாக மாறிப்போய்விடும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -