அபுஅலா –
அம்பாறை, அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்தின் அங்கி அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (27) அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழக காரியாலயத்தில இடம்பெற்றது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான ஏ.எல்.அப்துல் பத்தாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிதம அதிதியாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மற்றும் டாக்டர் எம்.பி.எம்.றஜீஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதன்போது சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்தின் தலைவரினால் கழக அங்கியை பிரதம அதிதிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் கழகத்தின் உபதலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமாகிய ஐ.எல்.முனாப், செயலாளரும் றுவான்புர தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளருமான ஏ.ஆர்.எம்.சாதிக், ஆலோசகரும் கொழும்பு இசுபத்தான கல்லூரியின் உதவி அதிபருமான கே.ஹமாமுதீன் மற்றும் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

