அபுஅலா,சுலைமான் றாபி -
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுகாதார, சுதேச பிரதியமைச்சருமான பைசால் காசிமின் முயற்சியின் கீழ் 10 மில்லியன் ரூபா செலவில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை (26) இடம்பெற்றது.
நிந்தவூர் ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார, சுதேச பிரதியமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண ஆயுர்வேத ஆணையாளர் டாக்டர் எஸ்.சிறிதரன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் மத்தியநிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், வைத்தியர்கள், சுகாதாரசேவை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூரில் அமைந்துள்ள பிர்தௌஸ் பள்ளிவாசல் அருகாமையில் உள்ள வளாகத்தில் இந்த ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


