எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அன்னமலை குடியிருப்புமுனை குளத்தில் பறவைகளை வேட்டையாடிய ஒருவரை கைது செய்துள்ளதுடன், 13 பறவைகளையும் குளப் பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை கைப்பற்றியுள்ளதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.
சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடந்து குளத்தடி பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் 08 கானன், 02 சில்லுத் தாரா, 01 மணிப் புறா, 01 உண்ணி வக்கா அடங்கலாக 13 பறவைகளையும் வேட்டையாடிக் கொண்டிருந்த 15கொளனியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றிய பறவைகள் மல்வத்தை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெறவுள்ளதாக சவளக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
