கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துரையாடல்!

ஹாசிப் யாஸீன்-

ல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின்பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்தலைமையில் நேற்று (17) வியாழக்கிழமை கல்முனை முஸ்;லிம் பிரதேச செயலக கூட்டமண்டபத்தில்இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான வீ.கலையரசன், எம்.இராஜேஸ்வரன், கல்முனைபிரதேச செயலாளர்களான எம்.எச்.எம்.கனி, எல்.லவநாதன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிஉள்ளிட்ட கல்முனை மாநகர சபை தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்டவிதாணைமார் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் கொண்டிருந்த அதிருப்திக்கானகாரணங்களை கேட்டறிந்து அதற்காக உத்தரவாதங்களை வழங்கியதோடு, இத்திட்டத்தினால் தமிழ் மக்கள்பாதிக்கப்படாதவாறு இரு சமூக மக்கள் பிரதிநிதிகளும் வெளிப்படையாக பேசி தீர்க்கமான முடிவுகளுக்குஎதிர்காலத்தில் வரவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -